நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காந்திய வழிப்போராட்டமே என்றும் சாத்வீகமானது: முதல்வர் நாராயணசாமி

காந்திய வழி அறப்போராட்டமே என்றும் சாத்வீகமானது என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2017, 11:53 am

சுஜித்குமார்

புதுச்சேரி: காந்திய வழி அறப்போராட்டமே என்றும் சாத்வீகமானது என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காந்தியடிகள் நினைவு நாள் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

தென் ஆப்பிரிக்காவிற்கு வழக்காடுவதற்காக சென்ற மகாத்மாகாந்தி அங்கு வெள்ளையர்கள், கருப்பர்களை அடிமையாக நடத்துவதை கண்டு போராடினார். வழக்கு முடிந்து நாடு திரும்பியவுடன் இந்தியாவை இந்தியர்களே ஆளவேண்டும் என நினைத்து தெருவில் இறங்கு போராடினார். 

அதற்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் உப்பு ஏற்றுமதி செய்யக்கூடாது என்பதற்காகவும், இங்கிலாந்தில் இருந்து துணிகள் இறக்குமதி செய்யக்கூடாது என்பதற்காகவும் போராட்டங்களை நடத்தினார். 

இந்து, முஸ்லீம், சீக்கியர், ஜெயின் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று மத கலவரத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வெற்றி கண்டவர். 

காந்தி நேருவை தனது வாரிசாக அறிவித்தார். நேரு பல முறை காந்தியுடன் சிறை சென்றுள்ளார். நேரு தனது மகள் இந்திராவை சிறையில்தான் பார்த்தார். நாட்டிற்காக ரத்தம் சிந்திய கட்சி காங்கிரஸ். 

சுபாஷ் சந்திரபோஸ் போர் மூலம் சுதந்திரம் பெற நினைத்தார். காந்தி அமைதியான போராட்டங்கள் மூலம் வெற்றி பெற நினைத்தார். இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் சுபாஷ் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டபோது காந்தி முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அந்தளவு காங்கிரசில் சுதந்திரம் இருந்தது, இருக்கிறது. 

பிரதமர் மோடி சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார். நாட்டில் 87 சதவீதம் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை தடை செய்துள்ளார். இதனால் வேலை வாய்ப்பின்மை, தொழிற்சாலை உற்பத்தி குறைவு, வியாபாரம் குறைவு, ரியல் எஸ்டேட் சரிவு, விவசாய உற்பத்தி குறைவு ஏற்பட்டு பொருளாதாரம் சரிந்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பண மதிப்பு இழப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறையும் என கூறியுள்ளார். இதற்கு பிரதமர் மோடி எந்த பதிலும் தரவில்லை. 

தற்போது பணமே இல்லாமல் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்ட பண அட்டைகள் மூலம் பரிமாற்றம் செய்ய கூறுகின்றார். கிராமங்களில் வங்கிகளும், ஏடிஎம்களும் இல்லை. விவசாயிகளிடமும், கூலி தொழிலாளர்களிடமும் அதை  பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வும் இல்லை. 

இதை கண்டித்து காங்கிரஸ் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன். நாம் அனைவரும் காந்திய வழியை பின்பற்றி நடக்க வேண்டும் என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.