புதுவையின் 3-ம் பாரம்பரியத் திருவிழா: நடிகர் நாசர், குஷ்பு பங்கேற்பு 5-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது
புதுச்சேரியின் 3-ம் பாரம்பரியத் திருவிழா வரும் 5-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது


புதுச்சேரி: புதுச்சேரியின் 3-ம் பாரம்பரியத் திருவிழா வரும் 5-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடிகர் நாசர், நடிகை குஷ்பு உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரி இன்டாக், சுற்றுலா துறை, பாண்டிகேன், அலையன்ஸ் பிரான்சே, ஹைடிசைன், பிரெஞ்ச் இன்ஸ்ட்டியூட், சிஆர்டி போன்ற அமைப்புகள் இணைந்து மூன்றாவது ஆண்டாக பாரம்பரிய திருவிழாவை நடத்துகின்றன.
இதுதொடர்பாக அலையன்ஸ் பிரான்சே இயக்குநர் ஓலிவியர், பாண்டிகேன் சுனைனா, இன்டாக் அருள் ஆகியோர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2015-ம் ஆண்டு பழமையான மேரி கட்டடம் இடிந்ததின் விளைவாக பாரம்பரிய கட்டிடக்கலையின் சிறப்பை மட்டும் போற்றும் விதமாக விழா நடத்தப்பட்டது.
ஆனால் தற்போது கட்டிடக்கலையின் சிறப்பை மட்டுமல்லாது, ஏனைய பிற தொன்மை வாய்ந்த பாரம்பரிய கலைகளின் சிறப்பையும், பெருமையையும் கொண்டாடும் விதமாக உள்ளது.
புதுச்சேரி ஒரு வரலாற்று பாரம்பரியம் மிக்க நகரமாகும். நம்மிடையே பல்வேறு கலாச்சாரங்களை சார்ந்த கட்டிடங்கள், இயற்கை வளம் மிக்க அழகிய கடற்கரை, வளமையான ஆன்மீக அர்ப்பணிப்புகள், நாட்டுப்புறம் மற்றும் பாரம்பரிய கலைகள், இலக்கியங்கள் மற்றும் தத்துவங்கள், உலகநாடுகளின் கலாச்சாரம் கலந்த ஒரு கலாச்சார கலவையாக காணப்படுகிறது.
தொன்மை வாய்ந்த கலாச்சாரத்தை பாதுகாப்பது நமக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. பாரம்பரிய திருவிழாவை கொண்டாடுவதன் மூலம் வரலாற்று பாரம்பரிய மிக்க கட்டிடப்பாரம்பரியம், இயற்கைப்பாரம்பரியம், நடனம், இசை, ஓவியம், சிற்பம் மற்றும் இலக்கியம் சார்ந்த பாரம்பரியக்கலையை பாதுகாக்கும் பொறுப்பு நமது மக்களுக்கு உள்ளது.
சோழர்காலத்திலேயே பிரசித்தி பெற்று விளங்கிய பாகூரில் விழா தொடங்குகிறது. அதன் வரலாற்று சிறப்புகள் குறித்த நிகழ்ச்சிகளும் விழிப்புணர்வு நடைபயணமும் மேற்கொள்ளப்படும்.
கைவினைப் பொருள்கள் சந்தை
புதுவையிலும், ஆரோவில் பகுதியிலும் தயாராகும் கைவினைப் பொருள்கள் விற்பதற்காக கடற்கரையில் உள்ள கிராப்ட் பஜாரில் கண்காட்சி நடைபெறவுள்ளது.
புதுவையின் கலாசார சிறப்பு, பாரம்பரியம், அதன் எதிர்கால வளர்ச்சி குறித்த பல்வேறு தரப்பினர் பங்கேற்கும் விவாத மேடை நிகழ்வும் நடத்தப்படுகிறது.
மேலும் விழாவை முன்னிட்டு ரோலர் ஸ்கேட்டிங், ஓவியப் போட்டி, புகைப்படக் கண்காட்சி, பாரம்பரிய கட்டடங்களை காண்பது உள்ளிட்டவையும் நடக்கிறது. முக்கிய நிகழ்வுகள் 24 முதல் 26-வரு நடைபெறும். இதில் முதல்வர் நாராயணசாமி, நடிகர் நாசர், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் எனத்தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...