மத்திய அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம்: 50 பேர் கைது
தமிழர் விரோதப் போக்கை கடைபிடிப்பதாக கூறி மத்திய அமைச்சர்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை


தமிழர் விரோதப் போக்கை கடைபிடிப்பதாக கூறி மத்திய அமைச்சர்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக புதுச்சேரியில் கருப்புகொடி போராட்டம் மற்றும் பிரதமரின் உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஹைட்ரோ- கார்பன் திட்டம் மூலம் தமிழகம் - புதுச்சேரியை பாலைவனமாக்குவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பது, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பதாகவும், தமிழர் விரோத போக்கை மத்திய பாஜக அரசு கடைபிடிப்பதாகவும் கண்டித்து மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்மலா சீத்தாராமன் வருகையை எதிர்த்தும் புதுச்சேரி அண்ணா சிலை அருகே தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக கருப்புகொடி போராட்டம் நடைபெற்றது.
மேலும் போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாலும், பிரதமர் நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்ததாலும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...