ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாதுகாப்பு கேட்டு ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன் மனு

ஆர்.கே நகரில் போட்டியிடும் அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன் பாதுகாப்பு கேட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

News image
Updated On :21 மார்ச் 2017, 8:42 am

தினமணி

ஆர்.கே நகரில் போட்டியிடும் அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன் பாதுகாப்பு கேட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. இத்தொகுதியில் அதிமுக சசிகலா அணி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனும், திமுக சார்பில் ஆர்.கே. நகர் கிழக்குப் பகுதி செயலாளர் என். மருது கணேஷும், எம்.ஜி.ஆர்-அம்மா-தீபா பேரவை சார்பாக அதன் தலைவர் தீபாவும், தேமுதிக சார்பில் அக்கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் ப.மதிவாணனும், அதிமுக ஓ.பி.எஸ். அணி சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான 76 வயதான இ. மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் ஆர்.கே நகரில் போட்டியிடும் அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன் பாதுகாப்பு கேட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மனுவில் ஆர்கே நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் எனவே, தேர்தல் முடியும் வரை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.