ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 1-இல் தொடக்கம்

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 1-ந் தேதியும், பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 5-ஆம் தேதியும் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On :29 மார்ச் 2017, 11:50 am

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 1-ந் தேதியும், பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 5-ஆம் தேதியும் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். கணினி அறிவியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த 27-ஆம் தேதி தேர்வு முடிந்துவிட்டது. உயிரியியல் பாடத்தை விருப்பபாடமாக எடுத்த மாணவர்களுக்கு வரும் மார்ச் 31-ஆம் தேதி தேர்வு முடிவடைகிறது.  10-ஆம் வகுப்பு தேர்வு கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர். பத்தாம் வகுப்பு தேர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) முடிவடைந்தது.

 பிளஸ்-2 தேர்வு முடிவு மே 12-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதியும் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியைத் தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி செய்துள்ளார்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில்,  விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்போது பிழை இன்றி இருக்கவேண்டும் என்றும், மதிப்பெண் கூட்டல் சரியாக இருக்கவேண்டும் என்றும், தவறாக மதிப்பீடு செய்யப்பட்டால் கண்டிப்பாக விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு தண்டனை உண்டு என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

10-ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. தமிழ் முதல் தாளுடன் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற உள்ளது. பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்குகிறது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிப்பில் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர் என்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.