சென்னையில் மே 7-ல் நவக்கிரக உலா நாட்டிய நிகழ்ச்சி
புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் கலைமாமணி கிருஷ்ணகுமாரி நரேந்திரனின் முயற்சியில் உருவான நவக்கிரக உலா எனும் நாட்டிய நாடகம், சென்னையில் மே


சென்னை: புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் கலைமாமணி கிருஷ்ணகுமாரி நரேந்திரனின் முயற்சியில் உருவான நவக்கிரக உலா எனும் நாட்டிய நாடகம், சென்னையில் மே 7-ம் தேதி நடைபெறுகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபா அரங்கில் மாலை 6.30 மணிக்குத் தொடங்கும் இந் நிகழ்ச்சியில் 80-க்கும் மேற்பட்ட நாட்டிய மாணவிகள் பங்கேற்கின்றனர்.
திருஞானசம்பந்தப் பெருமானின் கோளறு திருப்பதிகத்தை மூலமாகக் கொண்டு இந்த நாட்டிய நாடகத்தை வடிவமைத்துள்ள கிருஷ்ணகுமாரி நரேந்திரன், தானே பாடல்களை எழுதி இயக்கியுள்ளார்.
உலகம் முழுவதும் நடத்தப்பட்டுள்ள இந்த நாட்டிய நாடகம் 30-வது முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக விவரம் வேண்டுவோர் 94444 14148 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...