நீட் தேர்வு சமூகத்திற்கு எதிரானது: கனிமொழி குற்றச்சாட்டு
நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களை பாதிப்பதால் சமூகத்திற்கு எதிரானது என மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.


சென்னை: நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களை பாதிப்பதால் சமூகத்திற்கு எதிரானது என மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நாடு முழுவதும் பரவலாக இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. ஆனாலும், மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து, நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில், நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களை பாதிப்பதால் சமூகத்திற்கு எதிரானது என்று 50 சதவீத இடஒதுக்கீடு கேட்டு போராடும் அரசு மருத்துவர்களுக்கு திமுகவின் ஆதரவு உண்டு என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...