நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அண்ணாமலைப் பல்கலையிலிருந்து, தமிழகஅரசின் பல்வேறு துறைகளுக்கு 257 ஊழியர்கள் பணியிட மாற்றம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து 257 ஊழியர்கள், தமிழகஅரசின் பல்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம்

News image
Updated On :11 மே 2017, 2:23 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து 257 ஊழியர்கள், தமிழகஅரசின் பல்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் (Deputation) செய்யப்பட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை மேற்கண்ட ஊழியர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுமார் 12500 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நிதிநெருக்கடி சிக்கியுள்ளதால், மாதந்தோறும் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகஅரசு 

பல்கலைக்கழகத்தில் உள்ள சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் பணி நிரவல் செய்ய முடிவு எடுத்துள்ளது.

இதில் 1100 ஆசிரியர்கள் அடங்குவார்கள். ஏற்கனவே 2016 ஆண்டு பிப்ரவரி மாதம் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அறிவியல் துறையில் பணியாற்றிய 369 பேராசிரியர்கள் ஆசிரியர்கள் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளுக்கு பணிநிரவல் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்டமாக பல்கலைக்கழகத்தில் உள்ள 500 ஆசிரியர்கள் உள்ளிட்ட 2500 பேரை தமிழகஅரசின் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கு மாற்ற தமிழக உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 257 ஊழியர்கள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழகத்திலிருந்து 249 அலுவலக உதவியாளர்கள், 3 இளநிலை உதவியாளர்கள், 5 பாதுகாவலர்கள் உள்ளிட்ட 257 பேர் தமிழகஅரசின் கூட்டுறவு துறை, வேளாண்துறை, வேளாண்துறை டேட்டா சென்டர், சமூகநலத்துறை, குடிமைப் பொருள்துறை ஆகிய 5 துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தது: அண்ணாமலைப் பல்கலையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் 5500 பேர் கூடுதலாக தேவைக்கு அதிகமாக பணியாற்றுகின்றனர். இதனால் முதல் கட்டமாக 2500 இந்த வாரத்தில் தமிழகஅரசின் 30 துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.

வியாழக்கிழமை 257 ஊழியர்களுக்கு தமிழகஅரசின் 5 துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட ஊழியர்கள் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இடங்களில் பணியாற்றுவார்கள். இதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு மநாதம் ரூ.8.15 கோடி நிதி மிச்சமாகும் என பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.