பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தில்லி சட்டப்பேரவையில் பரபரப்பு: முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா மீது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தாக்குதல் 

தில்லி சட்டப்பேரவை கூடத்தில் கலந்து கொள்ள வந்த கபில் மிஸ்ராவை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தாக்கினர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

DIN

புதுதில்லி:  தில்லி சட்டப்பேரவை கூடத்தில் கலந்து கொள்ள வந்த கபில் மிஸ்ராவை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தாக்கினர்.

கேஜ்ரிவால் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட கபில் மிஸ்ரா, ஆளும் ஆம்ஆத்மி கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலருக்கு எதிராக ஊழல், லஞ்ச புகார்களை கூறியதுடன், அதற்கான ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு மற்றும் சிபிஐ.,யிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் இன்று சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கபில் மிஸ்ராவை அங்கிருந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தாக்கினர். பின்னர் அவைக்காவலர்களும், மற்ற உறுப்பினர்களும் அவரை மீட்டனர். சட்டசபைக்குள்ளாகவே முன்னாள் அமைச்சர் ஒருவர், சக எம்.எல்.ஏ.,க்களால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம்  பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.