/

நான் பதவி விலகவில்லை: ஆளுநர் கிரண்பேடி தகவல்

நான் பதவியை விட்டு விலகவில்லை. இதுதொடர்பாக வரும் செய்திகள் வதந்தி என ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :4 நவம்பர் 2017, 3:10 pm

புதுச்சேரி: நான் பதவியை விட்டு விலகவில்லை. இதுதொடர்பாக வரும் செய்திகள் வதந்தி என ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெறும் விழா ஒன்றில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை கிரண்பேடி சென்றுள்ளார். இதற்கிடையே அவர் தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டதாக தகவல்கள் பரவின.

இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது-

நான் பதவி விலகியதாக யார் வதந்தி பரப்புகின்றனர் எனத்தெரியவில்லை. நான் பதவி விலகவில்லை. புதுவையில் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது.

இந்த மாற்றத்தால் புதுவைக்கு பலன் கிடைக்கும். நடுநிலையோடும், அனைத்து தரப்பினரின் கருத்தை கூர்ந்து கவனிக்கும்,  களப்பணியாற்றும், அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடியவராகவும், நிலைமையை சிக்கலாக்காதவராகவும் உள்ள தலைமைச் செயலாளரே புதுவைக்கு தேவை. புதுவைக்கு சிறந்த மாற்று தேவைப்படுகிறது.

மக்களுக்கு அக்கறை, பொறுப்புடன் பதில் தரும் நேர்மையானவரே தேவை. ஏழை மக்களை தன்னிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். நல்ல நாள்கள் வர நான் பாடுபடுவேன். கடவுளின் ஆசியால் புதுவை பாதுகாக்கப்படும். நான் புதுச்சேரியையும், அதன் மக்களையும் வெகுவாக நேசிக்கிறேன். நான் இங்கே அச்சமின்றி பணிபுரியவே உள்ளேன். எனக்கு இது சிறந்த ஆன்மீக தலம், வேதபுரியாக உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.