புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தேசியச் சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்றார் குடியாத்தம் பள்ளி மாணவி 

இந்தியப் பள்ளிகளுக்கு இடையேயான 63ஆவது தேசியச் சதுரங்கப் போட்டிகள் தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடைபெற்றன.

News image
Updated On :16 நவம்பர் 2017, 10:31 am

DIN

இந்தியப் பள்ளிகளுக்கு இடையேயான 63ஆவது தேசியச் சதுரங்கப் போட்டிகள் தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடைபெற்றன. 10.11.2017 முதல் 14.10.2017 வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சதுரங்க வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக  19 வயதிற்கு உட்பட்டோர் மாணவியர் பிரிவில் தேசியச் சதுரங்கப் போட்டியில் பங்குபெற்ற குடியாத்தம் நேஷ்னல் மேல்நிலைப்பள்ளி மாணவி  ச.செந்தமிழ்யாழினி தங்கப்பதக்கம் வென்றார்.

இவருடன்  தமிழ்நாடு அணியில் இடம் பெற்றிருந்த சென்னையைச் சார்ந்த சிஎம்என்.சன்யுக்தா, கே.கிருத்திகா, ஏ.ஹர்சினி, திருச்சியைச் சார்ந்த கே.வைசாலி ஆகியோரும் தங்கப் பதக்கம் வென்றனர். தாங்கள் விளையாடிய போட்டிகளில் 12 க்கு 11 வெற்றிப் புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தனர். ஹரியனா, குஜராத், கேரளா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநில அணிகளை வீழ்த்தினர்.

 தங்கப் பதக்கத்தை உறுதி செய்வதாக அமைந்த போட்டியில் தமிழ்நாடு அணியும் மகாராஷ்டிரா அணியும் ஒன்றரைப் புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தபோது தன்னைவிட உலக மதிப்பீடில் உயர்விடத்தில் இருந்த மகாராஷ்டிரா வீராங்கனையைக் கருப்பு நிறக் காய்களுடன் விளையாடிய ச.செந்தமிழ்யாழினி BENONI CHESS OPENING  ஆட்ட நுட்பத்தைப் பயன்படுத்தி அதிரடியாக வீழ்த்தினார். இதன் மூலம் கடந்த ஆண்டு தங்கம் பெற்றிருந்த மகாராஷ்டிரா தமிழகத்திடம் இந்த ஆண்டு தங்கப்பதக்கத்தை இழக்க நேர்ந்தது.

2013ல் வெள்ளிப் பதக்கம், 2015ல் தங்கப்பதக்கம், 2016ல் வெள்ளிப் பதக்கம் தற்போது தங்கப்பதக்கம் என்று மொத்தம் 4 தேசிய அளவிலான வெற்றிப் பதக்கங்களை வென்றுள்ளார் ச.செந்தமிழ் யாழினி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.