காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

புளூவேல் விளையாட்டு: புதுச்சேரியில் எம்பிஏ மாணவர் தற்கொலை

புளூவேல் விளையாட்டு எனும் ஒருவித அபாயகரமான விளையாட்டில் ஈடுபடுவோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் நாள்தோறும்

News image
Updated On :1 செப்டம்பர் 2017, 2:40 am

DIN

புதுச்சேரி:  புளூவேல் விளையாட்டால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புளூவேல் விளையாட்டு எனும் ஒருவித அபாயகரமான விளையாட்டில் ஈடுபடுவோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

புளூவேல் விளையாட்டில் ஈடுபடும் நபர்கள், எதிர்ப்பக்கத்தில் முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் அளிக்கும் சவாலான காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும். இதை மறுத்தால், அவரை எதிர்ப்பக்கத்தில் இருப்போர் மிரட்டத் தொடங்கிவிடுவர். இதற்குப் பயந்து, விளையாட்டில் ஈடுபடுவோர் தற்கொலை செய்வதாகக் கூறப்படுகிறது.

அதாவது, நீர்வாழ் உயிரினமான நீளநிறம் கொண்ட திமிங்கலம், கடலில் இருந்து வெளியே வந்து தனது உயிரை விட்டு தற்கொலை செய்வதாகக் கூறப்படுவதுபோல் இந்த விளையாட்டு இருப்பதால், இந்த பெயர் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது ஆன்லைனில் விளையாடும் புளூவேல் என்ற பெயரிலான விளையாட்டுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதலாமாண்டு மாணவர் சசிகுமார் விடுதி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில், கல்லூரி மாணவர் இணையதளத்தில் புளூ வேல் என்ற விபரீத விளையாட்டால், புதன்கிழமை  தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.