அந்தமான்-நிகோபார் தீவில் அதிகாலை மிதமான நிலநடுக்கம்!

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில்ல் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது.
அந்தமான்-நிகோபார் தீவில் அதிகாலை மிதமான நிலநடுக்கம்!
Updated on
1 min read

போர்ட் பிளேர்: அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில்ல் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது.

அதிகாலை 12.10 மணியளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ எதுவுமில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Earthquake of magnitude 5.2 struck Andaman Islands. No loss of life/injuries or property reported
    — ANI (@ANI) September 6, 2017

இந்த நிலநடுக்கம் பூமியின் 86.8 கி.மீ.., ஆழத்தில் இருந்து ஏற்பட்டதாகவும், இதன் அதிர்வுகள் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரின் 168 கி.மீ., சுற்றுவட்டார பகுதிகளில் உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி 9.04 மணியளவில் அந்தமான் தீவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 10 கி.மீ. ஆழத்தில் இருந்து ஏற்பட்டது. ஒருமாத இடைவேளைக்குள் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அப்பகுதிவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com