டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தில்லியில் சந்திரபாபு நாயுடுவுடன் அரவிந்த் கேஜரிவால் சந்திப்பு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆந்திர பவனில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:39 pm

DIN

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆந்திர பவனில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி அண்மையில் விலகியது.  மேலும், மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவும் அக்கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. 

இந்நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு முதல் முறையாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று செவ்வாய்கிழமை தில்லி சென்றுள்ளார். மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். 

மத்திய பாஜக அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அநீதி இழைத்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடன் பிராந்திய கட்சிகள் கைகோக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை சந்திரபாபு நாயுடு ஓருங்கிணைக்கும் விதமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை ஆந்திர பவன் இல்லத்தில் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.