குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஈக்குவடோரியல் கினி, ஸ்வாஸிலாந்து, ஜாம்பியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஈக்குவடோரியல் கினி நாட்டுப் பயணத்தை இன்று (2018, ஏப்ரல் 9) நிறைவு செய்துவிட்டு, ஸ்வாஸிலாந்து நாட்டுக்குப் புறப்பட்டார்.
கினி நாட்டு அதிபருடன் நடத்தப்பட்ட விவாதத்தில் பரஸ்பர நலன்கள் சார்ந்த இரு தரப்பு உறவுகள், மண்டல, உலகளாவிய பிரச்சினைகள் இடம்பெற்றன. இரு நாட்டு மக்களின் மேம்பாடு, வளர்ச்சி ஆகியவற்றுக்காக இந்திய – ஈக்குவடோரியல் கினி நாட்டு கூட்டாண்மையை விரிவு செய்யவேண்டும் என்று இரு தரப்பினரும் இசைந்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் இரண்டாம் கட்ட பயணத்தைத் தொடங்கும் வகையில் மூன்று புரிந்துணர்வு உடன்பாடுகளில் நேற்று கையெழுத்திட்டார். ஆயுஷ், பாரம்பரிய மருத்துவம், மருத்துவத் தாவரங்கள் ஆகியவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் குறித்த செயல் திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப்பட்டது.
ஸ்வாஸிலாந்து, மற்றும் கினி நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தகது.
இந்தப் பயணத்தை மேற்கொள்வதை முன்னிட்டு, ஓர் அறிக்கையையும் குடியரசுத் தலைவர் வெளியிட்டார். அதில், இந்தியாவிலிருந்து முதன்முதலில் ஈக்குவடோரியல் கினி நாட்டுக்குப் பயணம் செய்வது தனக்குப் பெரிய கவுரவம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வழக்குரைஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கண்டனம்; பாா் கவுன்சில் விளக்கம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

கவிஞா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனுக்கு அரசு மரியாதை

ஜாதி, மதம் அற்றவா் என்பதை தெரிவிக்க சான்று அவசியம் இல்லை: உயா்நீதிமன்றம் கருத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

