/

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுல்யூ. புஷ் மனைவி, ஜார்ஜ் டபுல்யூ. புஷ் தாயாருமான பார்பரா புஷ்(92) காலமானார் என

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 8:13 am IST

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுல்யூ. புஷ் மனைவி, ஜார்ஜ் டபுல்யூ. புஷ் தாயாருமான பார்பரா புஷ்(92) காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர்.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்பரா புஷ்,  நேற்று செவ்வாய்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக புஷ் குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இறுதி சடங்கு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். 

நியூயார்க் நகரத்தில் 1925, ஜூன் 8-ஆம் தேதி பார்பரா புஷ் பிறந்தார். அவர் 1945-ஆம் ஆண்டு ஜார்ஜ் எச்.டபுல்யூ. புஷ் மணந்தார். 1989 முதல் 1993 வரையில் அமெரிக்காவில் முதல் பெண்மணியாகவும், 1981 முதல் 1989 வரை அமெரிக்காவில் இரண்டாவது பெண்மணியாகவும் பணியாற்றினார்.

பார்பரா புஷ் ​​உலகளாவிய எழுத்தறிவுக்கான காரணத்தை முன்னெடுப்பதற்காகவும், பார்பரா புஷ் பவுண்டேஷனை நிறுவினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.