மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காரைக்குடி அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆர்.எஸ்.எஸ் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 4:56 am

DIN

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆர்.எஸ்.எஸ் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (37). மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளரான இவர், வீட்டிலேயே முட வைத்திய சாலை நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்கரன் தனது நண்பர்களுடன் ரிஷிகேஷ் சென்று விட்டு திரும்பியவர், நேற்று இரவு வீட்டில் அவர் மனைவி தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் சுவர் மீது ஏறி வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர். இதில் வீட்டின் கதவு சேதமடைந்தது. மேலும் அங்கு இருந்த துணிகளும் எரிந்தது. 

சத்தம் கேட்டு எழுந்து வெளியே வந்து பார்த்த பாஸ்கரனின் மனைவி பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  

இதுகுறித்து பாஸ்கரனின் சகோதரர் பிரபாகரன் குன்றக்குடி காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து டிஎஸ்பி கார்த்திகேயன், ஆய்வாளர் ஆத்மநாதன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.