தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வேளச்சேரி - அரக்கோணம் மின்சார ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

வேளச்சேரி - அரக்கோணம் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 4:08 am

DIN

சென்னை : வேளச்சேரி - அரக்கோணம் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளதாவது: 

வேளச்சேரியில் இருந்து அரக்கோணத்திற்கு இன்று மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு காலை 10 மணி மற்றும், 11.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், அரக்கோணம் - திருத்தணி இடையே இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருத்தணியில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 1.15 மணி மற்றும் 2.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், திருத்தணி - அரக்கோணம் இடையே இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வேளச்சேரி - கடற்கரை செல்லும் மின்சார ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதி வழியில் நின்றுள்ளதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக  பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.