கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

புதுச்சேரி முன்னேற விரும்பினால் முதல்வர் என்னை பற்றி விமர்சிக்கக்கூடாது: கிரண்பேடி

புதுச்சேரி முன்னேற விரும்பினால் முதல்வர் என்னை பற்றி விமர்சிக்கக்கூடாது என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

Updated On :


புதுச்சேரி: புதுச்சேரி முன்னேற விரும்பினால் முதல்வர் என்னை பற்றி விமர்சிக்கக்கூடாது என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். 

புதுவையில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கள ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறார். சனிக்கிழமை அவருக்கு உடல் நிலையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டதால் கள ஆய்வு மேற்கொள்ளவில்லை. அதேநேரத்தில், தற்போது 175 கள ஆய்வுப்பணிகளை முடித்துள்ள ஆளுநர் கிரண் பேடி அது குறித்து ஆவணம் ஒன்றையும் தயார் செய்து வருகிறார்.

கள ஆய்வுப்பணியின்போது பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும். அதனடிப்படையில் மேல் நடவடிக்கையும் எடுக்கப்படும். பொதுமக்களுக்கு சேவை செய்வதும், அவர்களின் குறைகளை தீர்ப்பதும்தான் கள ஆய்வுப்பணியின் குறிக்கோள். அதை நாம் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு களப்பணியின் நேரமும் விலை உயர்ந்தது, மனித ஆற்றல் மற்றும் கூட்டு முயற்சியில் செய்யக்கூடியது எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில்,  புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், உத்தரவு பிறப்பிக்க அதிகாரமில்லாத துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, தனது உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரும் அவர் விதிகளை மீறிச் செயல்பட்டு வருகிறார். அவரது உத்தரவுகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு இல்லை. அமைச்சர்கள், அரசுச் செயலர்களுடன் கலந்தாலோசித்துதான் அவர் செயல்பட வேண்டும். 

ஆளுநர் கிரண் பேடி அதிகாரிகளை மிரட்டும் வகையில் செயல்படுகிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவர் முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். 

இந்நிலையில், புதுச்சேரி முன்னேற விரும்பினால் முதல்வர் என்னை பற்றி விமர்சிக்கக்கூடாது என்றும் ஆளுநர் மாளிகையின் அதிகாரங்களை குறைத்து மதிப்பீடு செய்வதால் மாநில வளர்ச்சி வேகம் குறையும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.