தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்: திருமாவளவன் பேட்டி

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகட்சியின் தலைவர் திருமாவளவன்

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST


நெய்வேலி: தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் என்.எல்.சி. திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற கட்சியின் நிர்வாகி திருமணத்தில்  திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் கருதுகின்றனர்.

அரசியல் வெற்றிடத்தை நிரப்ப நடிகர் என்ற கவர்ச்சி மட்டுமே போதும் என நடிகர்கள் நினைக்கின்றனர். தன்னால்தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என ஒவ்வொருவரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் என கூறினார்.

மேலும், தனது கட்சியில் சேர விரும்புவோர் எந்த சாதி அமைப்பிலும் இருக்க கூடாதென ரஜினி தெரிவித்தது வரவேற்கத்தக்கது. இதை ரஜினிகாந்த் இறுதியாக செயல்படுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன் என திருமாவளவன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.