நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாலத் தீவில் 15 நாள்களுக்கு அவசர நிலை பிரகடனம்

மாலத் தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார்.

News image
Updated On :18 ஜூன் 2022, 9:54 am

DIN

மாலத் தீவில் 15 நாள்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்திய வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில், மாலத்தீவில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு சூழல் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.  அதனால் அடுத்த அறிவிப்பு வரும்வரை இந்திய குடிமக்கள் மாலத்தீவுக்கு மேற்கொள்ளும் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி கூறிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மறுத்த யாமீன் அவசரகால நிலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.  இதனால் சந்தேகப்படுபவர்களை பிடித்து, கைது செய்வதற்கு பாதுகாப்பு படைகளுக்கு முழுமையாக அதிகாரம் வழங்கப்பட்டுவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.