தமிழ்நாடு போராட்டக்களமாக மாறும்: கி.வீரமணி எச்சரிக்கை
உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட அனுமதி மறுக்கப்பட்டால் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி


சென்னை: உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட அனுமதி மறுக்கப்பட்டால் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஹிந்தி பேசும் வட மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கலாமாம். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் அந்த உரிமை தமிழுக்கு கிடையாதாம். இதில், என்ன கொடுமை என்றால் இடைக்காலத்தில் தமிழிலும் வாதாடலாம் என்ற நிலை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வந்தது. அன்றைய தலைமை நீதிபதி ஏ.பி.ஷா இதற்கு துணையாகவும் இருந்தார். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழில் வாதாட நீதிபதி மணிக்குமார் அனுமதியும் வழங்கினார். பிறகு வந்த தலைமை நீதிபதி அதற்கு முட்டுக்கட்டை போட்டார்.
வடமாநிலங்களில் ஹிந்தி வழக்காடு மொழியாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழுக்கு அந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்?. இந்திய தேசியம் என்றால், ஹிந்திக்குத்தான் இடம், தமிழுக்கு இடமில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று எடுத்துக்கொள்ளலாமா?. தேசிய ஒருமைப்பாடு பேசுபவர்கள் இதற்குப் பதில் சொல்லட்டும். இந்தியாவை உடைக்கக் கூடியவர்கள் யார் என்பதையும் சிந்தித்துப் பார்க்கட்டும்.
தமிழ்நாடு அரசு வழக்கம்போல், எழுதியிருக்கிறோம்... சொல்லியிருக்கிறோம்.. என்று வெறும் சம்பிரதாய ரீதியாக நடந்து கொள்ளாமல் அண்ணாவை கட்சியின் பெயரில் வைத்துள்ளதற்காவது நாணயமாக நடந்து கொள்ளட்டும். இல்லையேல் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறும் என்று எச்சரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...