சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
சட்டப்பேரவையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். பட திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள்


சென்னை: சட்டப்பேரவையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். படத் திறப்பு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை.
தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத் திறப்பு நிகழ்ச்சியையொட்டி பேரவை வளாகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை 9.30 மணியளவில் பேரவைக்கு வந்த சபாநாயகர் தனபால், சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்களால் ஆயில் பெயின்டிங் முறையில் உருவாக்கப்பட்ட 7 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்தார்.
ஏற்கனவே, தமிழக சட்டப்பேரவையில் திருவள்ளுவர், ராஜாஜி, காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், காந்தி, அண்ணா, பெரியார், காயிதே மில்லத், எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் உள்ளிட்ட 10 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது. அந்த வரிசையில் தற்போது படம் 11-வது படமாக ஜெயலலிதாவின் உருவப்படம் இடம் பெற்றுள்ளது. ஜெயலலிதாவின் படம் தான் முதல் பெண் படமாக பேரவையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக நீதிபதிகளும், அரசு வழக்குரைஞர்களும் பங்கேற்றுள்ளனர். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
எதிர்க்கட்சிகள் வரிசையில் அதிமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அமர வைக்கப்பட்டனர். பார்வையாளர் மாடத்திலும் சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. திமுக உறுப்பினர்கள் இருக்கை அதிமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைப்பது வரவேற்கத்தக்கது என்று காங்கிரஸ் கொறடா விஜயதாரணி தெரிவித்துள்ளார். மேலும் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், பட திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் படத்தை திறப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஆர்.கே.நகர் தொகுதி சுயேட்சை உறுப்பினர் தினகரன் கலந்து கொள்ளவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...