பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு

மாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. 17ம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளன.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 4:30 pm

DIN

மாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. 17ம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: -

மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து, ஜன., 20ல் அடைக்கப்பட்ட சபரிமலை நடை, இன்று மாலை, 5.00 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, நடை திறந்து விளக்கேற்றினார். வேறு பூஜைகள் நடக்கவில்லை. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. 

நாளை அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனத்துக்கு பின், நெய்யபிஷேகம் ஆரம்பமாகும். 17ம் தேதி வரை, தினமும் காலை, 5:30 முதல் பகல், 12:00 மணி வரை நெய்யபிஷேகம் நடக்கும்.

எல்லா நாட்களிலும் இரவு, 7.00 மணிக்கு படிபூஜை நடக்கும். இவற்றுடன் களபபூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை ஆகியவை நடக்கும்.வரும், 17ம் தேதி இரவு, 10.00 மணிக்கு நடைசாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.