/

சில்லறை பணவீக்கம் 5.07 சதவீதமாக குறைவு

ஜனவரி மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 5.07 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய புள்ளியியல்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 3:26 pm

DIN

ஜனவரி மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 5.07 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான நுகர்வோர் விலை குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கத்தையும் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. அதன்படி, நுகர்வோர் பொருட்களின் விலை உணவு மற்றும் பானங்கள் 4.58%, பான், புகையிலை & நச்சுத்தன்மை 7.58%, ஆடை மற்றும் காலணி 4.94% ஆக உள்ளது. 

சில்லறை பணவீக்கம் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 5.21 சதவீதமாக இருந்தது. நுகர்வோர் உணவு விலை குறியீட்டெண் (CFPI) கடந்த மாதத்தில் 4.70% ஆக இருந்தது, ஆனால் ஜனவரி 2018 ல் 0.61% அதிகரித்து 4.96% ஆக உள்ளது. 

கடந்த மாதத்தில் பழங்கள் விலைகள் 6.24 சதவீதமாக குறைந்தன. முந்தைய மாதத்தில் இது 6.63 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் 3.17 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.