புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜஸ்தான்: திருமண நிகழ்ச்சியில் சிலிண்டர் வெடித்து 9 பேர் பலி

ராஜாஸ்தான் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சியில் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக

News image
Updated On :17 பிப்ரவரி 2018, 9:39 am

DIN

புதுதில்லி: ராஜாஸ்தான் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சியில் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் பீயார் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் 2-வது மாடியில் உள்ள சமையல் கூடத்தில் திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 2 குழந்தைகள், 1 பெண் உள்பட 9 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்துள்ளவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த விபத்தில் கட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளன.

ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொரு சிலிண்டர் மாற்றும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.