மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் தினக்கூலி ரூ.250-ல் இருந்து ரூ.380 ஆக உயர்வு

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் தினக்கூலி ரூ.250-ல் இருந்து ரூ.380 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் பல்வேறு நிலைகளில் மின்வாரிய
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் தினக்கூலி ரூ.250-ல் இருந்து ரூ.380 ஆக உயர்வு
Updated on
1 min read

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் தினக்கூலி ரூ.250-ல் இருந்து ரூ.380 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் பல்வேறு நிலைகளில் மின்வாரிய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

ஊதிய உயர்வு கோரி மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர் தங்கமணி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

பேச்சுவார்த்தை இறுதிமுடிவை எட்டிய நிலையில் தொழிற்சங்கத்தினர் மத்தியில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது

மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடந்து ஒப்பந்தம் இறுதியாகும் சூழலில் உள்ளது. தொழிலாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பது தான் இயல்பு. சிஐடியூ உள்ளிட்ட 17 தொழிற்சங்கத்தினரிடமும் கருத்து கேட்கப்பட்டது.

இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் 90,000 பேருக்கு 2.57% ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் முறையாக பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் 4வது சனிக்கிழமை விடுமுறை என்றும் அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com