டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

செங்கம் அருகே 8 வழிச்சாலை பணிக்கு கற்கள் பதிக்கவிடாமல் தடுத்த 4 பேர் கைது

செங்கம் அருகே 8 வழிச் சாலை பணிக்கு கல் பதிக்க விடாமல் தடுத்த 4 பேரை போலீஸார் கைது செய்து பணியை தொடங்கினா்.

News image
Updated On :23 ஜூலை 2018, 3:43 pm IST

செங்கம்: செங்கம் அருகே 8 வழிச் சாலை பணிக்கு கல் பதிக்க விடாமல் தடுத்த 4 பேரை போலீஸார் கைது செய்து பிறகு பணி தொடங்கினா். செங்கம் அடுத்த நீப்பத்துறை முதல் நயம்பாடி வரை செங்கம் தாலுக்காவிற்கு உள்ளிட்ட பகுதியில் சேலம் - சென்னை இடையை அமைக்கும் 8 வழிச் சாலைக்கு கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் செங்கம் அடுத்த கட்டமடுவு பகுதியில் ஆறுமுகம் மகன் அருள்(விவசாயி) இவரது நிலத்தில் 8 வழிச் சாலைக்கு கல்பதிக்க விடாமல் தகராறு செய்து வந்தாா்.  

வருவாய்த்துறை, போலீஸார் அந்த பகுதியில் முள்வேலி போட்டு இருப்பதால் அவா்களை மீறி  நிலத்திற்குள் சென்று கல்பதிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் அதிகாரிகள் அப்பகுதியில் சுமாா் 1 கிலோ மீட்டா் பணிகளை நிறுத்துவிட்டு மற்ற பகுதியில் பணிகளை செய்து வந்தனா். இந்நிலையில் செங்கம் தாலுக்காவிற்கு உள்பட்ட பகுதியில் 8 வழிச்சாலைக்கு கற்கள் பதிக்கும் பணிகள் முடிவடைந்தது.  

இந்நிலையில் நிலத்தின் உரிமையாளா்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை, போலீஸார் இடையே பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றது. ஆனால் அருள் என்பவா் அவரது நிலத்தில் செல்ல அனுமதிக்காமல் கம்பிவேலியின் கதவை திறக்கமுடியாது என தீா்த்து சொல்லியுள்ளாா். இதனால் வருவாய்த்துறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அருள் என்பவரின் கம்பிவேலிலை அறுத்துவிட்டு பணியை தொடங்கினா். 

அப்போது பணியை செய்யவிடாமல் அருள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டனா். உடனடியாக செங்கம் டிஎஸ்பி சுந்தரமூா்த்தில் தலைமையில் போலீஸார் ஆறுமுகம் மகன் அருள்(35), செல்வராஜ் மனைவி இந்திரா(40), ராமலிங்கம் மகன் செளந்தா்(38), ஆறுமுகம் மகன் மனோகரன் (42) ஆகிய நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து மேல்செங்கம் காவல் நிலையத்திற்கு அழைந்து வந்துள்ளனா். மேலும் தகராறு செய்யும் நபா்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக கூறினா். அதைதொடா்ந்து அப்பகுதியில் விவசாயிகள் பொதுமக்கள் கலைந்து சென்றனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.