வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தால் காவிரி நீர் கிடைக்குமா?: அமைச்சர் ஜெயகுமார் கேள்வி

காவிரி நீர் திறக்கும் முழு உரிமை மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமே இருக்கிறது எனவும் வசூல்ராஜா திரைப்பட பாணியில் கமல் கர்நாடக

News image
Updated On :5 ஜூன் 2018, 5:06 am

DIN

சென்னை:  காவிரி நீர் திறக்கும் முழு உரிமை மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமே இருக்கிறது எனவும் வசூல்ராஜா திரைப்பட பாணியில் கமல் கர்நாடக முதல்வருக்கு கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தால் காவிரியில் தண்ணீர் வந்துவிடுமா என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், காவிரி தீர்ப்பு வழங்கப்பட்டதால், காவிரி நீரை திறக்கும் உரிமையும், அதிகாரமும் ஆணையத்திடமே இருப்பதாக தெரிவித்தார். இந்த அடிப்படை கூட தெரியாமல், வசூல்ராஜா திரைப்பட பாணியில் கமல் கர்நாடக முதல்வருக்கு கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தால், காவிரி நீர் எப்படி கிடைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முழு உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது என்றும், அரசின் கொள்கை முடிவின்படியே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றம் மட்டுமன்றி, சர்வதேச நீதிமன்றங்களுக்கே சென்றாலும் இனி தமிழகத்தில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. கொள்கை முடிவுகளின் அடிப்படியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கும் தெரியும். தூங்குபவர்களை எழுப்பி விடலாம் ஆனால், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என கூறினார். 

மேலும், ஸ்டாலின் போன்ற எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாக மக்களை குழப்பவே முயற்சிப்பதாகவும் ஜெயகுமார்  குற்றம் சாட்டினார். 

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடு. மாநில அரசின் எதிர்ப்புகளை மீறி நீட் தேர்வு அளிக்கப்பட்டு விட்டதாகவும், நீட் தேர்வு தொடர்பான தற்கொலை நிகழ்வுகள் கவலைக்குரியது என்றும், இருப்பினும் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்படுவதாக ஜெயகுமார் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.