ரயில் மூலம் மட்டுமே நிலக்கரி கொண்டு வர முடியும்ரயில் மூலம் மட்டுமே நிலக்கரி கொண்டு வர முடியும்: அமைச்சா் பி.தங்கமணி
தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை ரயில் வேகன்கள் மூலமாக மட்டுமே எடுத்து


சென்னை: தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை ரயில் வேகன்கள் மூலமாக மட்டுமே எடுத்து வர முடியும் என்று மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, மின்சாரத் துறை தொடா்பான துணைக் கேள்வியை அதிமுக உறுப்பினா் செம்மலை எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:
செம்மலை: தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரிகள் ஒடிஸா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து எடுத்து வர அரசு நிறுவனத்தை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது. இதற்குப் பதிலாக, மின் வாரியமே நிலக்கரியை கடல் மார்க்கமாக கொண்டு வந்தால் செலவும் குறையும், நிதியும் மிச்சமாகும் என்றார்.
அமைச்சா் தங்கமணி: கோடையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்தியா முழுவதும் உள்ள அனல்மின் நிலையங்கள் முழுமையான உற்பத்தியைச் செய்து வருகின்றன. இதனால், அவற்றுக்கு நிலக்கரி தேவை அதிகமாக உள்ளது. தமிழகத்துக்கு 20 ரயில் பெட்டிகளில் தினமும் நிலக்கரி வர வேண்டும்.
ஆனால் அண்மைக்காலத்தில் 13 பெட்டிகள் மட்டுமே வந்தன. இப்போது, 17 முதல் 18 பெட்டிகள் வரை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நிலக்கரியை லாரிகள் மூலமாக எடுத்து வர முடியாது. ரயில் மூலமாகவே நமக்குத் தேவையான நிலக்கரி கிடைக்கும். ஏழு முதல் எட்டு நாள்கள் வரையில் நிலக்கரி கையிருப்பு இருக்கும் அளவுக்கு நிலைமையைக் கொண்டு வந்து விடுவோம். நிலக்கரி இல்லாமல் மின் உற்பத்தி பாதிப்பு என்ற நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...