பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை

கியூபா சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு உள்ள முன்னாள் பிரதமர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 
பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை
Updated on
1 min read

கியூபா சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு உள்ள முன்னாள் பிரதமர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் மலர்வளையம் அஞ்சலி செலுத்தினார். 

மத்திய அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மனைவி சுவிதா கோவிந்த், கிரீஸ், சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கியூபா சென்றடைந்தனர். ஹவானா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அவர் முன்னாள் பிரதமர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்திற்கு ராம்நாத் கோவிந்த், சவிதா கோவிந்த் சென்று மலர்வளையம் அஞ்சலி செலுத்தினர். பிடல் காஸ்ரோ நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல் பெண்மணி சவிதா கோவிந்த். 

தொடர்ந்து, ஹவானாவில் உள்ள தேச தந்தை மகாத்மா காந்தி நினைவு சிலைக்கும், குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் மரியாதை செலுத்த உள்ளார்

இதையடுத்து அந்நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கும் அவர், அதிபரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com