இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கான சோயா இறக்குமதி வரியை சீனா நீக்கியுள்ளது. ஜுலை முதல் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுளது.
இந்தியா, பங்களாதேஷ், லாவோஸ், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சோயாபீன்ஸ், ரசாயனங்கள், வேளாண் பொருட்கள், மருத்துவ பொருட்கள், ஜவுளி, இரும்பு மற்றும் அலுமினியம் ஆகிய பொருட்கள் மீதான வரி குறைக்கப்படுவதாக இன்று சீன அமைச்சரவை அறிவித்தது. உதாரணமாக 5 ஆசிய பசிபிக் நாடுகளில் இருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் சோயா பீன்ஸ் மீதான 3 சதவீத வரி முழுமையாக நீக்கப்படும். அதேசமயத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோயாவுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி திருத்தம் வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். கடந்த சில மாதங்களாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீன அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது.
எனவே அமெரிக்காவிலிருந்து கிடைக்கும் பொருட்களுக்கான கட்டணத்தை அதிகரிப்பது பண்ணைகள் மீது செலவினங்களை அதிகரிக்கும் மற்றும் இறைச்சி மற்றும் பால் போன்ற உணவு பொருட்களின் விலை உயரும் என தெரிகிறது.
அமெரிக்காவுடன் வர்த்தக யுத்தத்தை சீனா விரும்பவில்லை என்றாலும், அதன் நலன்களை பாதுகாப்பதற்கும், சுதந்திர வர்த்தகத்தை பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.
சீன சந்தையில் இந்திய பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் சீன சந்தையை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

நேஷனல் கிரஷ் கயாடு லோஹர் - புகைப்படங்கள்

16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை வேண்டும்! - அன்புமணி

கடைசி டி20: சூர்யவன்ஷி அரைசதம் விளாசல்; ஜிம்பாப்வேவுக்கு 193 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



