கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். 

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். 

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்  கடந்த 15-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வயிற்று வலி காரணமாக கோவா
Published on

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்  கடந்த 15-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வயிற்று வலி காரணமாக கோவா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவார சிகிச்சைப் பெற்று வந்த மனோகர் பாரிக்கர், கடந்த 22-ஆம் தேதி வீடு திரும்பினர்.

மருத்துவமனையில் இருந்து வந்த சில மணி நேரத்திற்குள் கோவா பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், ரத்தஅழுத்தம் காரணமாக பனாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று பூரண நலம் பெற்றதையடுத்து இன்று மாலை வீடு திரும்பினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com