6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

அம்பேத்கார் பெயரில் 'ராம்ஜி' சேர்க்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் அரசு ஆவணங்களில் இனி அம்பேத்காரின் பெயரை 'ராம்ஜி' அம்பேத்கார் என சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :29 மார்ச் 2018, 4:14 am

உத்தரப்பிரதேசத்தில் அரசு ஆவணங்களில் இனி அம்பேத்காரின் பெயரை 'ராம்ஜி' அம்பேத்கார் என சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நாள் வரை டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் என்ற குறிப்பிட அவரை இனி டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் என்றே இனி குறிப்பிட வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு ஆணை பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேச கவர்னர் ராம் நாயக் பரிந்துரையை ஏற்று, உத்தரப்பிரதேச அரசு அம்பேத்காரின் பெயரை மாற்றி அமைக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது. 

மத்திய பிரதேசத்தில் உள்ள 'மோ' என்ற இடத்தில் 1891, ஏப்ரல் 14ல் பிறந்தார். இவருடைய தந்தை ராம்ஜியும், பாட்டனாரும் ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள். விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர், ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.