கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

ஜிஎஸ்டி, வங்கிகளின் வாராக் கடனால் இந்தியாவின் வளர்ச்சி குறைவாக இருந்தது: ஐக்‍கிய நாடுகள் சபை அறிக்‍கை

வங்கிகளின் வாராக்‍கடன், ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்‍கு மற்றும் சேவை வரி காரணமாக, இந்தியாவின் வளர்ச்சி குறைவாக இருந்துள்ளதாக

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

நியூயார்க்: வங்கிகளின் வாராக்‍கடன், ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்‍கு மற்றும் சேவை வரி காரணமாக, இந்தியாவின் வளர்ச்சி குறைவாக இருந்துள்ளதாக ஐக்‍கிய நாடுகள் சபை அறிக்‍கை வெளியிட்டுள்ளது. 

ஐக்‍கிய நாடுகள் சபை இதுதொடர்பாக "உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் வாய்ப்புக்கள் 2018" (World Economic Situation and Prospects 2018) என்ற தலைப்பில் அறிக்‍கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், 2016-ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.1 ஒரு சதவீதமாக இருந்தது. ஆனால், 2017-ஆம் ஆண்டில் 6.6 சதவீதமாக இது குறைந்தது. சரக்‍கு மற்றும் சேவை வரி, வங்கிகளின் வாராக்‍கடன் நிலைமையே இதற்கு காரணம் என ஐ.நா. அறிக்‍கை தெரிவித்துள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை வங்கிகளின் வாராக்‍கடன் காரணமாக முதலீடுகள் குறைந்துள்ளன. வெறும் வட்டிவிகித குறைப்பு மட்டுமே முதலீடுகளை ஊக்‍குவிக்‍கவில்லை என ஐ.நா. அறிக்‍கை குறிப்பிட்டுள்ளது. 

புதிதாக கொண்டுவரப்பட்ட திவால் சட்டம் மற்றும் வங்கிகளில் அரசாங்கம் செய்யவிருக்‍கும் மறு முதலீடு காரணமாக, தனியார் முதலீடு உயரும் சூழல் உருவாகியுள்ளது. பண மதிப்பு நீக்‍கத்தின் பாதிப்புகள் குறைந்த பிறகு பண நுகர்வு அதிகரித்துள்ளதாகவும் அறிக்‍கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வங்கிகளின் வாராக்‍கடன் அதிகரித்துள்ளதால், இரட்டை பிரச்னை உருவாகியுள்ளது. ஏற்கெனவே கொடுக்‍கப்பட்ட கடனில் இருந்து எந்த வருமானமும் வராது. புதிதாக கடனும் கொடுக்‍க முடியாது. இந்த பிரச்னையை தீர்க்‍காத வரையில், தனியார் முதலீடுகள் குறைவாகவே இருக்‍கும் என அறிக்‍கையில் சுட்டிக்‍காட்டப்பட்டுள்ளது. 

இந்தியாவில் நடப்பாண்டில் 7.2 சதவீத வளர்ச்சி இருக்‍கும் என்றும் ஐக்‍கிய நாடுகள் சபை தனது அறிக்‍கையில் குறிப்பிட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மூன்றில் இரண்டு பகுதியினர் உலகளவில் வலுவான வளர்ச்சியை எதிர்கொள்கின்றனர். 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி 3.0 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உலகளாவிய பொருளாதாரம் சுமார் 3 சதவீதம் அதிகரித்து வருவதால், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, நிலவுகின்ற சமத்துவமின்மையை எதிர்கொள்வது மற்றும் அபிவிருத்திக்கு நிறுவன தடைகளை நீக்குவது போன்ற நீண்ட காலப் பிரச்சினைகள் தொடர்பாக மறுதலிப்பு கொள்கையை வழிநடத்த வேண்டும் என அறிக்‍கையில் சுட்டிக்‍காட்டப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.