மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
மேற்கு வங்கத்தில் 621 ஜில்லா பரிஷத்துகளுக்கும், 6,157 உள்ளாட்சி சமிதிகளுக்கும், 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு தொடங்கியது.
அஸ்ஸாம், ஒடிஸா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1,500 பாதுகாப்புப் படை வீரர்கள் மேற்கு வங்கத்துக்கு பாதுகாப்புப் பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் 58 ஆயிரத்திற்கும் அதிகமான உள்ளாட்சி பதவிகள் உள்ளன. இவற்றில் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 3,358 கிராம பஞ்சாயத்துகளில் 16,814 இடங்களில் யாரும் போட்டியிடவில்லை. 341 பஞ்சாயத்து சமிதிகளில், 3,059 இடங்களில் யாரும் போட்டியிடவில்லை. அதனால் இந்தப்பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறாது. மீதமுள்ள 621 ஜில்லா பரிஷத், 6,157 பஞ்சாயத்து சமிதிகள், 31,827 கிராம பஞ்சாயத்துகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் அந்த மாதம் 23-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை! தென் மாநிலங்கள் பாதிக்கப்படுவது எவ்வாறு?

அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை என்ற நம்பிக்கையால் சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி!

மகளிர் இடஒதுக்கீடு மசோவை ஆதரிக்கிறோம்; ஆனால்...: கார்கே
நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


