6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 3-ஆவது அலகில் சனிக்கிமை திடீரென கொதிகலனில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டதை அடுத்து மீண்டும்

Updated On :21 மே 2018, 4:46 am

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 3-ஆவது அலகில் சனிக்கிமை திடீரென கொதிகலனில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் ஏறத்தாழ 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாக முழு மின் உற்பத்தியை எட்டாத நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில், 3 ஆவது அலகில் உள்ள கொதிகலனில் கடந்த சனிக்கிழமை (மே 19) திடீரென பழுது ஏற்பட்டதால் அந்த அலகின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இதனால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து பழுதை சரிசெய்யும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இன்று அதிகாலை முதல் மீண்டும் மின் உற்பத்தி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.