ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

வல்லூர் அனல் மின் நிலையத்தின் ஒன்றாவது அலகில் மின் உற்பத்தி துவங்கியது

வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.  

Updated On :21 மே 2018, 5:34 am

திருவள்ளூர்: வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.  

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள வல்லூர் கிராமத்தில், தேசிய அனல் மின் நிலையம் அமைந்துள்ளது.  

இங்கு தேசிய அனல் மின் கழகமும்,  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும் இணைந்து, கூட்டு முயற்சியாக மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் மின் உற்பத்தி என 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இங்குள்ள ஒன்றாவது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக, 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 

கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இன்று மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.