6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்: காந்தி நினைவிடத்தில் ராகுல், சோனியா மரியாதை

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளான இன்று தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்

News image
Updated On :2 அக்டோபர் 2018, 10:49 am

DIN


புதுதில்லி: மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளான இன்று தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நம் நாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடியவர் மகாத்மா காந்தி. அவரது 150-வது பிறந்த நாளான இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தி தினமாக நாடும் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

இதையடுத்து தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

மேலும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிற தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலம் வார்தா அருகேயுள்ள சேவா கிராமம் ஆசிரமத்தில் இன்று காரியக் கமிட்டி கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

காரியக் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மகாத்மாவின் கொள்கைகளை நாடு முழுவதும் எடுத்துச் செல்வது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் பிரார்த்தனை, அமைதி பேரணி நடைபெறும். ராகுல் காந்தியும் உரையாற்ற இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.