பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா?

அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளர்களின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் ரூபாய் நீக்கப்பட உள்ளதாக

News image
Updated On :19 அக்டோபர் 2018, 4:06 am

DIN


வாஷிங்டன்: அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளர்களின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் முழுக்க 74 ரூபாய் வரை சரிந்தது. இது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும். இந்த நிலையில் தற்போது இந்திய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் வகையில் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து புதுதில்லியில் எடுக்கப்பட்ட சில முன்னேற்றங்கள் மற்றும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, அமெரிக்க கருவூலத் துறை கவலை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற ஐந்து நாடுகளுடன் சேர்ந்து அந்நிய செலாவணி கொள்கைகள் கொண்ட நாடுகளின் கவனிப்பு பட்டியலில் இந்திய ரூபாயை கண்காணிப்பு பட்டியலில் இணைத்ததாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கருவூலத்துறை உலகம் முழுக்க உள்ள சில முக்கிய ரூபாய்களை கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. அதன்படி எந்த நாட்டு ரூபாய்கள் எல்லாம் உலகில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த நாட்டை சேர்ந்த ரூபாய்கள் மட்டுமே இந்த வரிசை பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கும். அந்த ரூபாயின் சர்வதேச மதிப்பை, தாக்கத்தை வைத்து இந்த பட்டியலில் சேர்க்கப்படும். அந்த வகையில் சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் பணம் அமெரிக்காவின் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவும் தற்போது இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 

ஆனால், கடந்த சில மாதங்களாக, இந்திய ரூபாய் வரிசையாக குறைந்து கொண்டே வந்தது. ஜிஎஸ்டி வந்த பின் இந்திய ரூபாய் மதிப்பு பல பொருளாதார பின்விளைவுகள் காரணமாக வீழ்ச்சி அடைந்தது. மிக முக்கியமாக வரலாறு காணாத அளவுக்கு இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. கடந்த வாரமாக ரூபாய் மதிப்பு ரூ.73 தாண்டி சரிந்துள்ளது. இந்த தொடர் சரிவு காரணமாக, இந்திய ரூபாயை தனது நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்க போவதாக அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில வாரங்கள் இந்திய ரூபாய் மதிப்பு கண்காணிக்கப்படும். அதற்குள் ரூபாய் மதிப்பு சரியாகவில்லை என்றால், அதை பட்டியலில் இருந்து நீக்கிவிடுவோம் எனத் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவின் நாணய கண்காணிப்பு  பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் அது உலக சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.