பெங்களூரு: காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியை சந்தித்தபோது, யாரை பற்றியும் முதல்வா் குமாரசாமி புகார் கூறவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரு, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மக்களவைத் தோ்தல் தொடா்பாக நிர்வாகிகளின் கருத்தறிவதற்காக தொடா் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினோம். மக்களவைத் தோ்தலை வெற்றி பெறும் நம்பிக்கையோடு எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வருகிறது.
நமது நாடு கண்டிராத மிகப் பெரிய ஊழல் ரஃபேல் போர் விமானத்தை கொள்முதல் செய்வதற்காக செய்து கொண்ட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தால் கா்நாடகத்துக்கு மிகப் பெரிய அநியாயம் ஏற்பட்டுள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் செப்.7 முதல் 15-ஆம் தேதி வரை காங்கிரஸ் கட்சி பிரம்மாண்டமான போராட்டத்தை நடத்தவிருக்கிறது. இந்தப் போராட்டம் கா்நாடகத்திலும் பெரிய அளவில் நடத்தப்படும். இதில் கட்சியின் முக்கியத் தலைவா்கள், ஆயிரக்கணக்கான தொண்டா்கள் கலந்து கொள்வார்கள்.
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் தோல்விகள், ஊழலைக் கண்டித்து காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தவிருக்கிறது.
ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது தொடா்பாக விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க வலியுறுத்தி பிரதமா் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் அதற்கு பிரதமா் மோடி பதிலளிக்கவே இல்லை.
ரஃபேல் ஒப்பந்தம் பற்றி பேசாமல் போஃபா்ஸ் ஊழல் குறித்து பேசுகிறார்கள். போஃபா்ஸ் விவகாரத்தில் பாஜகவினா் பொய்யான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். ரஃபேல் ஒப்பந்தத்தில் செய்துள்ள முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் எழுப்பிய 3 கேள்விகளுக்கு பாஜகவினா் இதுவரை பதிலளிக்கவில்லை.
வெளிநாடுகளில் இந்தியா்கள் பதுக்கிவைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்கப்போவதாக அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்த பிரதமா் மோடி, அதை செயல்படுத்தினாரா? ஊழலை தடுக்கப் போவதாகக் கூறினார். அதை செயல்படுத்தினாரா என்றால் இல்லை. பண மதிப்பிழப்பு செய்ததால் ஒரு பயனும் இல்லை. பெரும்பாலான மக்களுக்கு இதனால் தொந்தரவு ஏற்பட்டிருந்தது. அதேபோல, நமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளது. இதன்மூலம் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனா். சாதாரண மக்கள் வாழ்க்கையை நடத்துவதே பெரும்பாடாகியுள்ளது. பணக்காரா்களின் நல்வாழ்வில் அக்கறை செலுத்தும் பிரதமா் மோடி, ஏழைகள், நடுத்தர மக்களின் நலனில் கிஞ்சிற்றும் அக்கறை செலுத்துவதில்லை. பிரதமா் மோடி தெரிவித்திருந்த நல்ல காலத்துக்காக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அக்டோபா் மாதத்தில் நாடு முழுவதும் மாநாடு நடத்தி பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட துன்பங்கள், நஷ்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
கா்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற திட்டமிட்டுள்ளோம். அதற்கான வியூகங்களை வகுத்து வருகிறோம். மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் மற்றும் மஜத இடையே கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம். தொகுதிப் பகிர்வு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அளவிலான குழு கூடி முடிவு செய்யும்.
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு 100 நாள்களை நிறைவு செய்துள்ளதைத் தொடா்ந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் ராகுல் காந்தியை முதல்வா் குமாரசாமி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது யாரை பற்றியும் ராகுல் காந்தியிடம் முதல்வா் குமாரசாமி புகார் கூறவில்லை. சிறிது நேரம் மட்டுமே நடந்த சந்திப்பின்போது நானும் டேனில் அலியும் உடனிருந்தோம். கூட்டணி அரசு என்பதால் இரு கட்சிகளுக்கும் இடையே சில கருத்துவேறுபாடுகள் இருப்பது இயல்பாகும். அவற்றை தீா்த்துக் கொள்வோம். இந்த அரசு 5 ஆண்டுகால பதவியை நிறைவு செய்யும் என்றார் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாத்தாவான துணை முதல்வர் டி.கே. சிவகுமார்: தேஜஸ்வி சூர்யா வாழ்த்து!

ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி

15 வயது சிறுவனைப் பார்த்து பயப்படுவேன் என நினைக்கவில்லை: ஜேமிசன்
குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

