ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உச்சத்தை நோக்கி உயருகிறது தங்கம்: பவுன் விலை ரூ.28,896

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று செவ்வாய்கிழமை(ஆக 13) மீண்டும் அதிகரித்து, புதிய உச்சத்தை நோக்கி சென்றுள்ளது. நேற்று பவுனுக்கு

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:48 am

DIN


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று செவ்வாய்கிழமை(ஆக 13) மீண்டும் அதிகரித்து, புதிய உச்சத்தை நோக்கி சென்றுள்ளது. நேற்று பவுனுக்கு ரூ.168 உயர்ந்து, ரூ.28,824-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று மீண்டு கிராமுக்கு ரூ.72 உயர்ந்து ஒரு பவுன் ரூ.28,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 13 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்துள்ளது. 

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி ஆபரணத் தங்கம் ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை விலை ரூ.28 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகும் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திங்கள்கிழமையும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.168 அதிகரித்து ரூ.28,824-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.21 உயர்ந்து, ரூ.3,603-க்கு விற்பனையான நிலையில், இன்று செவ்வாய்கிழமை மீண்டு உயர்ந்துள்ளது. அதாவது தினம் தினம் தங்கத்தின் விலை உயர்ந்து புதிய வரலாறு படைக்கிறது. இன்று கிராமுக்கு ரூ.72 உயர்ந்து ஒரு பவுன் ரூ.28,896க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி  முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை மொத்தம் 13 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்துள்ளது. தினம் தினம் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை விரைவில் ரூ.30,000 தொடும் என்கின்றனர். வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயர்ந்து ரூ.48.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

செவ்வாய்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,612
1 பவுன் தங்கம்    28,896
1 கிராம் வெள்ளி    48.50

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.