ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

News image
Updated On :17 ஆகஸ்ட் 2019, 12:11 pm

DIN


தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. 

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு 22 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். 

அவசர வார்டுக்கு அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து எய்ம்ஸில் உள்ள அவசர ஆய்வகம் மூடப்பட்டுள்ளது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன. 

A fire has broken out on first and second floor at All India Institute of Medical Sciences (AIIMS). Fire brigade present at the spot. emergency lab at AIIMS has been shut after a fire broke out near the emergency ward 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.