ஆண்டு ஒன்றுக்குள் 7 மூத்த தலைவர்களை இழந்த பாஜக!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி(66) சுவாசப்பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்
ஆண்டு ஒன்றுக்குள் 7 மூத்த தலைவர்களை இழந்த பாஜக!


ஆண்டு ஒன்றுக்குள் பிரபலமான 7 மூத்த தலைவர்களை இழந்து நிற்கிறது பாரதிய ஜனதா கட்சி.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி(66) சுவாசப்பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 12.07 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். 

பாரதிய ஜனதா கட்சி கடந்த ஒரு ஆண்டிற்குள் அருண் ஜேட்லி உட்பட அதன் முக்கிய மூத்த தலைவர்கள் 7 பேரை இழந்துள்ளது. அவர்களில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் அடங்குவர்.

பால்ராம்ஜி தாஸ் டாண்டன்: பாஜக மூத்த முக்கிய தலைவரும், சட்டீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக பதவி வந்த பால்ராம்ஜி தாஸ் டாண்டன்(90), 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலமானார். 

அடல் பிஹாரி வாஜ்பாய்: முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வந்த அடல் பிஹாரி வாஜ்பாய். நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று காலமானார்.

மதன்லால் குரானா: தில்லி முன்னாள் முதல்வரும், தில்லி, ராஜஸ்தான் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த மதன்லால் குரானா, 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி காலமானார். 

அனந்த்குமார்: பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், வாஜ்பாய், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அமைச்சர் பதவிகளை வகித்தவருமான அனந்த்குமார் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி காலமானார். 

மனோகர் பாரிக்கர்: மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சரும், கோவா முன்னாள் முதல்வருமான  மனோகர் பாரிக்கர் 2019 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி காலமானார். 

சுஷ்மா ஸ்வராஜ்: பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், வெளியுறவுத்துறையின் முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ்(67) 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி காலமானார். 

அருண் ஜேட்லி: பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நிதி மற்றும் உள்துறையின் முன்னாள் அமைச்சருமான அருண் ஜேட்லி(66), 2019 ஆம் ஆண்டு இன்று ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலமானார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com