மரியாதைக்குரியவர் காலமாகிவிட்டார்: தமிழிசை இரங்கல்

மிகச்சிறந்த பொருளாதார சீர்த்திருத்தங்களை உருவாக்கி நாட்டு மக்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றவர். கட்சி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை
மரியாதைக்குரியவர் காலமாகிவிட்டார்: தமிழிசை இரங்கல்
Published on
Updated on
1 min read


மரியாதைக்குரியவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி மனதிற்கு மிகுந்த வருத்தத்தையும், வலியையும் தருகிறது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். 

தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மரியாதைக்குரியவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி மனதிற்கு மிகுந்த வருத்தத்தையும், வலியையும் தருகிறது. உடல் நலம் சரியில்லாத போது கூட சரியான தகவல்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டுமென்று, சிகிச்சைக்காக மருத்துவனைக்கு செல்கிறேன் என்று ட்வீட் செய்துவிட்டு சென்றவர். இன்று நம்மிடம் இல்லை என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

அருண் ஜேட்லி அவர்கள் எளிதில் அணுகக்கூடிய தலைவர். மிகச்சிறந்த பொருளாதார சீர்த்திருத்தங்களை உருவாக்கி நாட்டு மக்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றவர். கட்சி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர். கட்சிக்கும் சரி ஆட்சிக்கும் மிகப் பெரிய தூணாக விளங்கியவர். எல்லோரும் எளிதில் அணுகக்கூடிய தலைவர். அவரின் மிகுந்த ஆற்றலும், அறிவாற்றலும், மக்களுக்கு பலமுள்ளதாகவும் பலன் உள்ளதாகவும் இருந்தது. 

மக்கள் சார்ந்து எந்த கோரிக்கை வைத்தாலும் உடனே செவிசாய்த்து, அதை தீர்க்கக் கூடியவர். சமீபத்தில் ஜிஎஸ்டி விஷயமாக சாமானிய மக்களின் கோரிக்கையாக நாங்கள் கேட்டுக்கொண்டதை எல்லாம் உடனே நிறைவேற்றி தந்திருக்கிறார். இல்லையென்றால், சற்று கால அவகாசம் எடுத்துக்கொண்டு நிறைவேற்றி தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். 

அவரின் மறைவு கட்சிக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு. நாம் மக்களுக்காக சேவை செய்வதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், பாஜக தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com