அக்.25: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோல் ரூ.75.87; டீசல் ரூ.69.71

சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை (அக்.25) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.87 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.71 காசுகள் என
கோப்புப்படம்
கோப்புப்படம்


 
சென்னை: சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை (அக்.25) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.87 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.71 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 15 ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதனிடையே கடந்த சில தினங்களாக ஏறுமுகமாக இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலையில் சில தினங்களாக குறைந்தும், மாற்றமின்றியும் விற்பனையாகி வருகின்றன. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.75.87 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் லிட்டருக்கு 06 காசுகள் குறைந்து ரூ.69.71 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com