சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

விநாயகர் சதுர்த்தி: நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

விநாயகர் சதுர்த்தி இன்று செப்டம்பர் 2 (திங்கள்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி மக்கள்

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:59 am

DIN

சென்னை: விநாயகர் சதுர்த்தி இன்று செப்டம்பர் 2 (திங்கள்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி மக்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். 

விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதையொட்டி பொதுமக்கள் நேற்று மாலை முதலே கடைகளுக்கு சென்று சென்னையின் முக்கிய பகுதிகளான தியாகராய நகர், கோயம்பேடு காய்கறி சந்தை, புரசைவாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1000 க்கும் மேற்பட்ட சிறு, குறு வியாபாரிகள் திறந்து வைத்துள்ள கடைகளில் விநாயகர் சிலை, பூஜை பொருள்கள், பழவகைகள், அவல்பொரி உள்ளிட்ட பொருள்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். 

பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு இன்று அலங்காரம் செய்து கொழுக்கட்டை, அவல், பொரி முதல் விநாயகருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

விநாயகர் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

மும்பையில் பிரபலமான லால்பவுச்சா ராஜா விநாயகர் சிலை அமைக்கப்பட்டு  பொதுமக்கள் வழிபாடுசெய்து வருகின்றனர். மேலும் பிள்ளையார்பட்டி கோயிலிலும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ பிரமாண்ட கொழுக்கட்டை படையல் செய்தும் வழிபாடு செய்து வருகின்றனர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலிலும் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.