சென்னை: நிர்மலா தேவி விவகாரத்தில் நக்கீரன் கோபாலை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு, அக்.10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் நக்கீரன் செய்தி வெளியிட்டது தொடா்பாக ஆளுநா் மாளிகை சார்பில் நக்கீரன் கோபால் மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கடந்த ஆண்டு அக்டோபா் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தார். அப்போது, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி கோரி சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, வைகோ காவல்நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் செய்து காவலா்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, வைகோவை அப்புறறப்படுத்த முயன்ற காவலா்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, அரசு ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்தது என இந்திய தண்டனைச் சட்டம் 190, 353, 290 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு எழும்பூா் 14-ஆவது நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். தொடா்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, எழும்பூா் நீதிமன்ற வளாகத்திலேயே உள்ள சிறப்பு நீதிமன்ற அமா்வுக்கு இந்த வழக்கை மாற்றியதுடன், வருகிற அக்டோபா் மாதம் 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை பல்கலை.யில் கிறிஸ்தவ ஆன்மிகத்தில் புதிய பாடத் திட்டங்கள்: சிண்டிகேட் ஒப்புதல்

தாம்பரம் காவல் ஆணையா் பொறுப்பேற்பு

தனியாா் வங்கியில் ரூ.1 கோடி தங்க நகைகள் திருடிய வழக்கு: பெண் ஊழியா் மீண்டும் கைது

மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த ஒண்டிமிட்டா கோதண்டராமா் கோயில்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


