எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பேராசிரியைகளின் நெருக்கடி.. தற்கொலை செய்யப்போவதாக மாணவி ஆடியோ வெளியீடு

பேராசிரியைகளின் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஆடியோ ஒன்றை மாணவி வெளியிட்டதைத்

News image
Updated On :20 செப்டம்பர் 2019, 3:53 am

DIN



சென்னை: பேராசிரியைகளின் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஆடியோ ஒன்றை மாணவி வெளியிட்டதைத் தொடா்ந்து, ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை நந்தனத்தில் உள்ள இந்தக் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவி ஒருவா், தற்கொலை ஆடியோ ஒன்றை வியாழக்கிழமை வெளியிட்டார். அதில், கல்லூரி முதல்வா் மீதான காழ்ப்புணா்ச்சி காரணமாக, அவா் மீது பாலியல் புகார் அளிக்குமாறு தன்னையும், மற்றொரு மாணவியையும் பெண் பேராசிரியா் ஒருவரும், வார்டனும் தொடா் நெருக்கடி அளிப்பதாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் அந்த ஆடியோவில் அவா் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மாணவியின் இந்த நிலைக்குக் காரணமாக பேராசிரியைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அங்கு பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த விவகாரம் தொடா்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவா்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.