வியாழக்கிழமை தில்லி ரோஹிணியில் உள்ள குடியிருப்பு சொஸைட்டிக்கு வெளியே இருந்து எல்லைப் பாதுகாப்புப் படை பிஎஸ்எஃப் ஊழியரின் 12 வயது மகள் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிறுமி காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ரோஹிணியின் செக்டாா் 28-இல் உள்ள அவரது குடியிருப்பு சொஸைட்டி வாயிலுக்கு வெளியே இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
சிறுமி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, சொஸைட்டி வாயிலுக்கு வெளியே இருந்து காணாமல் போனதாக குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்தனா். அவா் திரும்பி வராததால், குடும்பத்தினா் அவரை அக்கம் பக்கத்தில் தேடத் தொடங்கினா். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது தொடா்பாக தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, சிறுமியைக் கண்டுபிடிக்க குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
‘இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. மேலும் சாத்தியமான அனைத்து கோணங்களிலும் ஆராயப்பட்டு வருகிறது. சிறுமியை விரைவில் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன’ என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

திரைத்துறை கவா்ச்சியில் இருந்து மக்கள் வெளியே வரவேண்டும்: சீமான்

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- 5 பேர் கைது

நொய்டாவில் 28-ஆவது மாடியிலிருந்து குதித்து 21 வயது மாணவி தற்கொலை

குன்னூா் தொகுதி அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


